அலகாபாத் வழக்கறிஞர் மீதான துப்பாக்கிச்சூடு: தமிழகத்தில் நீதிமன்றப் புறக்கணிப்பால் பாதிப்பு

சற்றுமுன்

சென்னை: அலகாபாத் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் காவல் துறை உதவி ஆய்வாளரால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர். இதனால் நீதிமன்றப் பணிகளில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்ட நீதிமன்றத்தில் காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கடந்த 11-ம் தேதி துப்பாக்கியால் சுட்டதில் வழக்கறிஞர் ஒருவர் இறந்தார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் மார்ச் 16-ம் தேதி வழக்குரைஞர்களின் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை இந்திய பார் கவுன்சில் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் நேற்று நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உத்தரப் பிரதேச காவல் துறையினருக்கு எதிராக கோஷமிட்ட வழக்குரைஞர்கள் சென்னையில், ஆவின் கேட் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒரு பிரிவினர் என்எஸ்சி போஸ் சாலையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சைதாப்பேட்டை, எழும்பூர், ஜார்ஜ் டவுன், பூந்தமல்லி உட்பட தமிழகம் முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதால் நீதிமன்ற பணிகள் பாதிக்கப்பட்டன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.