December 5, 2025, 9:19 PM
26.6 C
Chennai

“ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?”

1234201 315112848661397 4724600860700186658 n 1 - 2025

“ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?”

(இந்தக் குழந்தை கர்ப்பவாசத்துல இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம்
செஞ்சுவைச்சுட்டாரே நரசிம்மர். அவரே நாமகரணம் பண்ணினதுக்கு அப்புறம் நான் வேறஎன்ன
சொல்றது.அக்காரக்கனியே உங்குடும்பத்துக்கு கிடைச்சிருக்கு.)

கட்டுரையாளர்-பி.ராமகிருஷ்ணன்
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

நன்றி-03-11-2016 தேதியிட்ட குமுதம் பக்தி
(ஒரு பகுதி)

பரமாசார்யாளோட பரம பக்தாளா இருந்த ஒரு குடும்பத்துல பொறந்த ஒரு
புள்ளையாண்டானுக்கு கல்யாணம் பண்ணிவைக்கத் தீர்மானிச்சா.அவனைப் பெத்தவா உடனே
மகாபெரியவாளை தரிசனம் பண்ணி அவரோட உத்தரவைக் கேட்டா.

அடிக்கடி மடத்துக்கு வரக்கூடிய அவாளை பரமாசார்யாளுக்கு நன்னாவே
தெரியும்.வழக்கமா ஆசிர்வாதம் பண்ணி பிரசாதம் குடுத்துட்டு, ஏதாவது நல்ல
காரியத்துக்கு உதவும்படி அவாள்ட சில சமயம் சொல்லுவார்ஆசார்யா.அவாளும் அதை
பரம சந்தோஷமா
உத்தரவைக் கேட்டா.

“புத்ரனுக்கு விவாஹம் செய்யறதுக்கு முன்னால, ஒரு நல்லநாளாய் பார்த்து,பக்கத்து
பெருமாள்கோயில்ல பானகம் விநியோகம் பண்ணு.எல்லாம் நல்லபடியா நடக்கும்!”னு
சொல்லிட்டு கைநிறைய கல்கண்டை அவாகிட்டே குடுத்தார்.

வழக்கமா ஏதாவது ஒரு பழத்தைத்தரக்கூடிய
பெரியவாகல்கண்டைமட்டும்குடுத்ததும்கொஞ்சம் யோசிச்சாஅவா.
இருந்தாலும் பெரியவா கையால எதைக் குடுத்தாலும் அது மகாபிரசாதமாச்சே….அந்தத்
திருப்தியோட வாங்கிண்டா.

இங்கே ஒரு விஷயத்தை சொல்லியாகணும்.

அந்தப் பொண்ணோட குடும்பத்துல எல்லாருக்குமே மகாபெரியவாளை ஒரு ஆசார்யாளா
பிடிக்கும்.அதே சமயம், தங்களோட குலதெய்வமான நரசிம்மரோட உத்தரவைத்தான் அவா
எல்லா விஷயத்துலயும் கேட்டுப்பா.

நாளொரு மேனி பொழுதொரு வண்ணம்னு சொல்லுவாளே அதே மாதிரி கருவும் வளர்ந்து
வளைகாப்பும் முடிஞ்சுது.

தாயும் சேயும் ஆரோக்யமா இருக்கணும்.குழந்தை க்ஷேமமா பொறக்கணும்னு பையனோட
ஆத்துல எல்லாரும் பரமாசார்யாளை வேண்டிண்டா. பொண்ணோட குடும்பத்துல
குலதெய்வமான நரசிம்மர்கிட்டே,
பிரார்த்தனை பண்ணிண்டா.தலைச்சன் பிரசவம்கறதால,பொண்ணை அவளோடபொறந்த ஆத்துக்கு
அனுப்பிவைச்சா,
புள்ளையாத்துக்காரா.

அம்மா ஆத்துல ஆனந்தமா இருந்தா அந்தப் பொண்ணு. ஒரு நாள் ராத்திரி,அவளுக்கு ஒரு
கனவு வந்தது.

“உனக்குப் பொறக்கப்போற குழந்தைக்கு என்னோட பேரை வை”. தூண்தோன்றிய பெருமாள்
,அவளோட கனவுல தோன்றி சொல்றதாக வந்தது அந்த சொப்பனம்.

குலதெய்வமான நரசிம்மரே கனவுல வந்ததால், சந்தோஷம்,பரவசம் எல்லாம்
பாவித்தாலும் கூட ஒரு பயமும் வந்தது.தன்னோட மாமனார் குடும்பத்துல எல்லாரும்
பரமாசார்யா சொல்றைதைத்தான் வேதவாக்கா எடுத்துக்கறவா. அவா கிட்டே எப்படி இதைச்
சொல்றது.ரொம்ப நேரம் யோசிச்சவ , வீணா நாம குழம்புறதுல என்ன புண்ணியம்?
நம்ப இஷ்டத்துக்கு என்ன நடக்கப் போறது? நடக்கறதெல்லாம் நரசிம்மரோட
செயல்னுட்டு குழம்பறதை
நிறுத்தினா.

விடிஞ்சு எல்லாரும் எழுந்ததும் தான் கண்ட சொப்பனத்தை தன்னோட
அப்பா,அம்மாகிட்டே சொன்னா. அவா கொஞ்சம் தயங்கிண்டே சம்பந்தி ஆத்துல சொன்னா.

“அதெல்லாம் கூடாது.எங்களுக்கு எல்லாம் பரமாசார்யா உத்தரவுதான். ஒங்க
இஷ்டத்துக்கு எதையாவது தீர்மானம் பண்ணிட்டு சுவாமி சொப்பனும்னு வீணா
கடவுள்மேலே பழி போடாதேள்!” கொஞ்சம் கடுமையாகவே சொன்னா,
புள்ளை ஆத்துக்காரா.

பேரை ஏத்துக்காதது கூட பரவாயில்லை.சொப்னத்தில் வந்தது பொய்னு சொல்றாளேன்னு
வருத்தமா இருந்தது

உரிய காலத்துல அழகான ஆண்குழந்தை பொறந்தது. அந்தப் பொண்ணுக்கு. பிரசவகால சௌசம்
எல்லாம்
முடிஞ்சதும்,மகாபெரியவாளை தரிசக்கப் புறப்பட்டா எல்லாரும்.

குழந்தையை பரமாசார்யா முன்னிலையில் கிடத்தினா.

“பெரியவா நீங்கதான் குழந்தைக்கு நாமகரணம் பண்ணி வைக்கணும்.உங்க வாக்குலேர்ந்து
வர்ற பேர்தான் இவனுக்கு வைக்கப்போறோம்!” பவ்யமா சொன்னார் குழந்தையோட அப்பா
வழித் தாத்தா.

சில நிமிஷம் குழந்தையையே உத்துப் பார்த்தார் குழந்தை விழிச்சுண்டு உம்மாச்சித்
தாத்தாவைப் பார்த்து பொக்கைவாயைத் திறந்து சிரிச்சுது.

“ஒரு குழந்தைக்கு எத்தனைதரம் நாமகரணம் பண்ணுவேள்?”

எல்லாரும் அமைதியா இருந்த சமயத்துல அதிரடியா
கேட்டார், பரமாசார்யா.

எல்லாரும் பதறிப்போனா. “ஆசார்யா,என்ன சொல்றேள்?னு அதிர்ச்சியா கேட்டார்
புள்ளையோட தகப்பனார்.

“ஏன் உன் மருமா உங்கிட்டே சொல்லலையா? இந்தக் குழந்தை கர்ப்பவாசத்துல
இருக்கறச்சேயே அதுக்கு நாமகரணம் செஞ்சுவைச்சுட்டாரே நரசிம்மர். அவரே
நாமகரணம்பண்ணினதுக்கு அப்புறம்நான்வேற என்னசொல்றது.
அக்காரக்கனியே உங்குடும்பத்துக்கு கிடைச்சிருக்கு. சந்தோஷமா போயிட்டு வா?
சொல்லி ஆசிர்வாதம் செஞ்சார் ஆசார்யா.

அப்படியே அத்தனைபேர்கண்ணுலேர்ந்தும்பொலபொலன்னு
பாஷ்பம்வழிஞ்சுது.தான்சொன்னதுபொய்யில்லைன்னும்
நிரூபணம் ஆயிடுத்து. நரசிம்மர் பேர் வைக்கிறதும் உறுதியானதால் ரெட்டிப்பு
சந்தோஷம் அந்த தாயாருக்கு. அதோட மகா பெரியவாமேல பக்தியும் உருவாயிடுத்து.

அவாத்துப் பொண்ணு கனவுல நரசிம்மர் வந்து தன்னோட பேரை வைக்கச் சொல்லி
கேட்டுண்டது ஆசார்யாளுக்கு எப்படித் தெரிஞ்சுது? இது ஒரு
ஆச்சர்யம்னா,இதையெல்லாம் முன்னாலேயே தெரிஞ்சுண்டு -கல்யாணம் பண்ணப்போறதா சொன்ன
சமயத்திலே கல்கண்டு கைநிறைய தந்தது எப்படி?

பின் குறிப்பு-கல்கண்டு என்ன சம்பந்தம்?

அக்காரக்கனின்னு நரசிம்மரைச் சொல்றது வைணவ சம்பிரதாயத்துல உண்டு.
அக்காரக்கனினா கல்கண்டு
என்று அர்த்தம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories