திமுக தலைவர் கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் மறுமலர்ச்சி தி.மு.க.
பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் சந்தித்து உடல்நலம் விசாரித்தார். திமுக
செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் துரைமுருகன் ஆகியோர் உடன் இருந்தனர்
(22.08.2017 செவ்வாய்க்கிழமை)
திமுகவில் கருணாநிதியுடன் இணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்து வைகோ பேட்டி
அளித்துள்ளார். 29 ஆண்டுகள் கருணாநிதியின் நிழலாக இருந்து பணியாற்றியதாக வைகோ
நெகிழ்ச்சி அடைந்தார். கருணாநிதியை சந்தித்த போது தமது கையை பற்றிக் கொண்டதை
குறிப்பிட்டு வைகோ உருக்கம் அடைந்தார். இருவரும் கண்களில் நீர் கசிய
சந்தித்துக் கொண்டதாக வைகோ நெகிழ்ச்சியான பேட்டி அளித்துள்ளார்.




