ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று சுரேஷ் பிரபு ராஜினாமா: பொறுமை காக்க மோடி வேண்டுகோள்

இந்தியா சற்றுமுன்

suresh prabhu - 2026

புது தில்லி:

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த 5 நாட்களில் 2 ரயில் விபத்துகள் நிகழ்ந்தன. இந்த விபத்துகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அவ்வாறு ராஜினாமா கடிதம் அளித்தபோது தன்னை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி கூறியதாக சுரேஷ் பிரபு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர் நகர் அருகே உத்கல் எக்ஸ்பிரஸ் ரயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், 23 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில், இன்று உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் அருகே ஹைஃபியத் எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், ரயில் இன்ஜினுடன் சேர்த்து 10 பெட்டிகள் தடம் புரண்டன. சுமார் 100 பேர் காயமடைந்தனர்.

இவ்வாறு, உபி.,யில் நிகழ்ந்த இரு ரயில் விபத்துகளுக்கு பொறுப்பேற்று ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ராஜினாமா கடிதத்தை அளித்தார். ஆனால், தன்னை பொறுத்திருக்குமாறு பிரதமர் மோடி கூறியதாக சுரேஷ் பிரபு டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

அவரது டிவிட்டர் பதிவுகள்.:

 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.