
புது தில்லி:
தங்களுக்கு விதிக்கப்பட்ட 4 ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்த்து சசிகலா தரப்பு தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் தாக்கல் செய்த சீராய்வு மனுக்கள் மீது நேற்று விசாரிக்கப்பட்டது. இன்று அதன் முடிவுகளை அறிவிப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று பிற்பகல் அந்த மனுக்களை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதை அடுத்து, சசிகலாவுக்கான அனைத்து கதவுகளும் மூடப் பட்டதாக வல்லுநர்கள் கூறுகின்றனர்.
ஏற்கெனவே இந்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.



