
தமிழக அரசு கொறடா ராஜேந்திரன் தலைமைச் செயலகத்தில் பேட்டி கொடுத்தார்
அவர், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்து கொள்ளும் 19 எம்.எல்.ஏ.க்களின் பதவியைப் பறிக்க பரிந்துரை செய்துள்ளதாகக் கூறியுள்ளார் அரசு கொறடா ராஜேந்திரன். சபாநாயகர் நடவடிக்கைக்கு பரிந்துரை செய்துள்ளதாகக் கூறி அறிக்கை ஒன்றினையும் அவர் அளித்துள்ளார்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் தகுதி நீக்கம் செய்யப் படுவார்கள் என்ற அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., ஏழுமலை (பூந்தமல்லி) அரசு கொறடா ராஜேந்திரனுக்கு பதிலடியாக புதுச்சேரியில் பேசியபோது, எங்களுக்கு ஆட்சி முக்கியமல்ல, கட்சிதான் முக்கியம். அவர்கள் எந்த விதமான நடவடிக்கையும் எடுத்துக் கொள்ளட்டும் என்று கூறியுள்ளார்.




