தமிழகத்தில் இன்று … 5,875 பேருக்கு கொரோனா பாதிப்பு! 98 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் தமிழகம் நெல்லை லைஃப் ஸ்டைல்
corona-virus-4
corona-virus-4

தமிழகத்தில் இன்று 5875 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து தமிழகத்தில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. இன்று வரை, 56,998 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர்.

இன்று ஒரே நாளில் 5,517 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப் பட்டுள்ளனர். இதை அடுத்து இதுவரை கொரோனாவில் இருந்து குணம் பெற்று வீடு திரும்பியோர் எண்ணிக்கை 1,96,483 ஆக அதிகரித்துள்ளது.

இன்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 98 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனாவுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4132 ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில், 60,344 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன. இதுவரை 27,79,062 மாதிரிகள் சோதனை செய்யப் பட்டுள்ளன.

கொரோனா பாதிப்பு மாவட்ட வாரியாக விவரம்..

corona district wise report Aug 02 - 2026

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.