திருச்சி மலைக்கோட்டை அருகே நேற்று பெய்த கனமழை காரணமாக 3 மாடி கட்டிடம்
இடிந்து விழுந்தது.
வீட்டில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருக்கலாம் என
மீட்பு குழுவினர் தகவல்.
இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்க போலீஸ் மற்றும் பொது மக்கள் தீவிர முயற்சி
மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் 6 குடும்பங்களை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் சிக்கியிருப்பதாக
போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
2 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்




