நாகர்கோவில்- ஓணம் கொண்டாட்டத்துக்காக தோவாளை மலர் சந்தையில் இருந்து கேரள
வியாபாரிகளால் 3 லட்சம் கிலோ மலர்கள் கொள் முதல் செய்யப்பட்டுள்ளன.
சிறப்பு விற்பனை நடைபெற்ற ஒரே நாளில் 70 டன் பூக்கள் விற்பனையாயின.சிறப்பு
வியாபாரத்தில் கொள் முதல் செய்வதற்காக வழக்கத்தை விட அதிகமான வியாபாரிகளும்,
பொதுமக்களும் கேரளத்தில் இருந்து வந்திருந்தனர்.
ஆயிரக் கணக்கானோர் கூடியதால் தோவாளை மலர் சந்தை களைகட் டியது.மல்லிகை கிலோ
ரூ.700, பிச்சி ரூ.1,000-க்கு விற்பனையானது.
மற்றபடி சம்பங்கி ரூ.150, செவ்வந்தி ரூ.250, கிரேந்தி ரூ.55, வாடாமல்லி
ரூ.250, பச்சை கட்டு இலை ரூ.10, தாமரை ஒன்று ரூ.10, துளசி ரூ.30, ஓசூர் ரோஜா
ரூ.250 என விற்பனையானது.




