தாத்தா இறந்த துக்கம்! விஷம் அருந்திய பேரன்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
poison 1

அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருந்த தாத்தா திடீரென உயிரிழந்ததால் மனவேதனை அடைந்த இன்ஜினீயரிங் படித்த வந்த பேரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூரில் நடந்துள்ளது.

ஈரோடு மாவட்டம், அந்தியூரை அடுத்த வெள்ளித்திருப்பூர் அருகே உள்ள ஜர்த்தலை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் கோகுல் (20). இவர் பெருந்துறையில் உள்ள பொறியியல் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

ஊரடங்கால் கல்லூரி மூடப்பட்டதால் வீட்டிலேயே இருந்து வந்தார் கோகுல். இந்த சூழ்நிலையில், தனது தாத்தாவுடன் கோகுல் பொழுதை கழித்துவந்துள்ளார். இந்த நிலையில் தாத்தாவுக்கு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த வாரம் உயிரிழந்தார். தாத்தா இறந்த துக்கத்தில் கோகுல் இருந்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 19-ம் தேதி வீட்டில் விஷத்தை குடித்து மயங்கி கிடந்தார் கோகுல். இதை பார்த்த அருகில் இருந்தவர்கள், கோகுலை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கோகுல் கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், கோகுல் நேற்று முன்தினம் இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அளவுக்கு அதிகமான அன்பு வைத்திருந்த தாத்தா இறந்ததால் மனமுடைந்த பேரன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தியூரில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.