ottanchathiram-police-station
ottanchathiram-police-station

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளராக பணிபுரிந்து வரும் சிவராஜ்(35) இவருக்கு கடந்த 4 நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருக்கு பத்து நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு வீட்டில் தனிமையில் இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டது.

இந்நிலையில் சுவராஜ் தனது நண்பர்களுடன் தாண்டிக்குடி மலைப்பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் தங்கி இருந்துள்ளார். அங்கு அவர்களுடன் சேர்ந்து மது விருந்தில் பங்கேற்று உள்ளார்.

இதனால் அருகில் இருந்த ஒரு சிலருடன் தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் சார்பு ஆய்வாளர் அவர்களை தாக்கியுள்ளார். மேலும் இந்த தகராறில் சிவராஜும் காயமடைந்தார்.கொரோனா அறிகுறி இருந்ததால் காந்திகிராமம் சிறப்பு மருத்துவ மையத்திற்கு சென்று உள்ளார்.

இதுகுறித்து தாண்டிக்குடி காவல்துறையினர் விசாரணை செய்தனர். கொரோனா தொற்று கண்டறியப்பட்டு தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்ட நிலையிலும் நண்பர்களுடன் மது விருந்தில் பங்கேற்று வெளியில் சுற்றி அதோடு மற்றவர்களுடன் தகராறில் சார்பு ஆய்வாளர் ஈடுபட்டது தெரியவந்தது

ALSO READ:  சதுரகிரி ஆடி அமாவாசை முன்னேற்பாட்டுப் பணிகள்; அதிகாரிகள் ஆய்வு!

இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரவளிபிரியா அவரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

  • மோகன் கணேஷ், திண்டுக்கல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending