சிறுமி கர்ப்பம்! இருவர் மாறி மாறி மிரட்டி பாலியல் வன்கொடுமை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0813_221154

கூலி தொழிலாளி ஒருவர் வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு அருகேயுள்ள மாத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது 16 வயது மகள் 10 ஆம் வகுப்பு முடித்த நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில், அதே பகுதியில் வசித்து வரும் அன்பரசன்( வயது 18) மற்றும் பிரதாப் ( வயது 34) ஆகிய இருவரும் சரியான நேரம் பார்த்து சிறுமி தனியாக இருக்கும் போது, பாலியல் தொல்லை செய்து வந்துள்ளனர்.

மேலும், சிறுமி தனியாக இருக்கும் போதெல்லாம் சிறுமியை மிரட்டி இருவரும் மாறி மாறி பாலியல் பலாத்காரம் செய்து வந்துள்ளனர். மேலும், இருவரும் சிறுமியிடம் இதை பற்றி வெளியே சொன்னால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று சிறுமியை கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதனால், சிறுமி இதனை வெளியே யாரிடமும் கூறவில்லை.

இதனையடுத்து, சிறுமி தற்போது 4 மாதம் கர்ப்பமாக உள்ளார். இதனை அறிந்த அந்த சிறுமியின் பெற்றோர் இது பற்றி சிறுமியிடம் கேட்டுள்ளனர். அப்போது அந்த சிறுமி அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் செய்த பாலியல் கொடுமைகளை சிறுமி கூறியுள்ளார். இந்நிலையில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இருவர் மீதும் குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், வழக்கு பதிவு செய்த போலீசார் அன்பரசன் மற்றும் பிரதாப் ஆகிய இருவரிடையே போக்சோ சட்டத்தின் கீழ் கைது விசாரணை நபாதியத்தில் புகார் உறுதியானது. இதனை தொடர்ந்து, இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.