பிஹெச்டி படித்து விட்டு கூலி வேலை செய்யும் முனைவர்!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
phd-man-working
phd-man-working
  • பிஹெச்டி படித்து விட்டு கூலி வேலை செய்யும் முனைவர்.
  • கொரோனா புண்ணியத்தால் வண்டி ஓடம் ஆகிறது. ஓடம் வண்டி ஆகிறது.

பள்ளி ஆசிரியர்கள் பஜ்ஜி விற்கும் நிலையைப் பார்க்கிறோம். ஆனால் டாக்டரேட் படித்த ஒருவர் கட்டடக் கூலியாக வேலை செய்வதை பார்க்கும்போது மனம் வலிக்கிறது.

‘இத்தனை படித்த நம் சாரே தினக்கூலியாக வேலை செய்கிறாரே என்று என் மாணவர்கள் நினைத்து வருந்தும் நிலைமை உள்ளது. பின் அவர்களை நன்றாகப் படியுங்கள் என்று கூறி எவ்வாறு என்னால் மோட்டிவேட் செய்ய இயலும் என்று விளங்கவில்லை.

என் உறவினர்களும் நண்பர்களும் இவ்வளவு செலவு செய்து இத்தனை படிப்பு படித்து பிரயோஜனம் இல்லாமல் போய் விட்டானே என்று பரிகாசம் செய்கிறார்கள். வருந்துகிறார்கள். ஆனால் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. என் கால்களில் நான் நிற்கிறேன். தினமும் 500 லிருந்து 600 ரூபாய் வரை கூலி கிடைக்கிறது. வாழ்க்கை ஓடுகிறது.

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

நான் எழுதிய புத்தகங்கள் கல்லூரியில் மாணவர்களுக்கு ரெஃபரென்ஸ் ஆக உள்ளது. ஆனால் என் நிலைமையை பாருங்கள்… இது காலத்தின் கோலமா? என் தரித்திரமா? அல்லது அமைப்பில் தவறு உள்ளதா? என்று விளங்க வில்லை’ என்கிறார் பிஹெச்டி முனைவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.