கொரோனா: ஆம்புலன்சில் கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தை!

அடடே... அப்படியா? இந்தியா சற்றுமுன்
baby

கேரளாவில் கொரோனா பாதித்த கர்ப்பிணி பெண்ணுக்கு ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே குழந்தை பிறந்துள்ளது. அப்பெண்ணுக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 38 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ஆம்புலன்ஸ் மூலம் அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே, ஆம்புலன்ஸ் வாகனத்திலேயே அவருக்கு குழந்தை பிறந்தது. பிரசவத்தின் போது அவருக்கு உதவிய ஆம்புலன்ஸ் ஊழியர்களுக்கு கேரள சுகாதாரத்துறை அமைச்சர் சைலஜா உள்ளிட்டோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.