சென்னை: மருத்துவப் படிப்புக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7-5 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும், 2ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 16-21 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்று மருத்துவக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
முன்னதாக முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 7 முதல் 10 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு ஜூலை 22-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.




