எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை காலம் நிறைவு செய்துள்ள 67 ஆயுள் தண்டனை சிறைவாசிகள் முன் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: எம்.ஜி.ஆர். நூற்றாண்டு பிறந்த நாளினை முன்னிட்டு தமிழக சிறைகளில் இருந்து வரும் சிறை வாசிகளை முன்விடுதலை செய்ய அரசு பரிசீலனை செய்தது. இது தொடர்பாக அரசியலமைப்பு சட்டம் பிரிவு 161-ன்படி, மாநில ஆளுநருக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தியும், உச்ச நீதிமன்றம் மற்றும் மாநில உயர் நீதிமன்றங்களின் வழிகாட்டுதலின் படியும் அரசாணைகள் மூலம் நெறிமுறைகள் குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதியுடன், 10 ஆண்டுகள் தண்டனைக் காலம் நிறைவு செய்துள்ள ஆயுள் தண்டனை சிறைவாசிகளில், முதற்கட்டமாக 67 பேர் முன் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிடப் பட்டிருந்தது.




