சென்னை: மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், இன்று மாலை தமிழகத்தின் மூத்த அரசியல்வாதியும் திமுக., தலைவருமான மு.கருணாநிதியை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து, அவருக்கு நாள் வாழ்த்து தெரிவித்தார்.
மூத்த அரசியல் தலைவர், எழுத்தாளர் மற்றும் சிறந்த பேச்சாளரும் 5 முறை தமிழகத்தை ஆண்ட முன்னாள் முதல்வர் கருணாநிதி நேற்று தமது 95 வது பிறந்த நாளைக் கொண்டாடினார். அதையொட்டி இன்று (4/6/2018)மாலை அவரை கோபாலபுரம் இல்லத்தில் நேரில் சந்தித்து வாழ்த்தினேன் என்று இந்த சந்திப்பு குறித்து பொன்.ராதாகிருஷ்ணன், குறிப்பிட்டார்.



