ஏப்ரல் 19, 2021, 3:04 காலை திங்கட்கிழமை
More

  வைகை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழப்பு!

  வைகை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழப்பு மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து

  madurai vaigai river - 1

  மதுரை வைகை ஆற்றில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரு சிறுமிகள் உயிரிழப்பு மதுரை கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

  மதுரை ஆரப்பாளையம் அருகே மறவர் 2வது தெரு பகுதியை சேர்ந்த முருகன் – முத்து தம்பதியினருக்கு 4பெண் குழந்தைகள் இருந்துள்ளது. மூத்த பெண்குழந்தைகளான சுஜி மற்றும் ஸ்ருதி ஆகிய இருவரும் நேற்று மாலை வைகை ஆற்றில் குளிக்கசென்றுள்ளனர்.

  இதனையடுத்து இருவரையும் காணவில்லை என பெற்றோர்கள் மதுரைகரிமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்த நிலையில் தேடிவந்தனர். இந்நிலையில் இரு சிறுமிகளின் உடல் உயிரிழந்த நிலையில் மதுரை ஆரப்பாளையம் மற்றும் எல்.ஐ.சி பாலம் அருகே 2 சிறுமிகள் சடலமாக மிதந்துகொண்டிருந்தது.

  இதனை பார்த்த பொதுமக்கள் காவல்துறையினருக்கு அளித்த புகாரையடுத்து காவல்துறையினர் தனியார் ஆம்புலன்ஸ் உதவியுடன் 2 உடலானது மீட்கப்பட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து மதுரை கரிமேடு காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

  ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரிகள் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உடல் மீட்பு பணிகளை பார்க்க பொதுமக்கள் குவிந்த்தால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

  மதுரை வைகை ஆற்றில் அடிக்கடி உயிரிழப்புகள் ஏராளமான நடைபெற்று வருகிறது தடுக்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,114FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »