விஜயோடு போட்டி போடும் சிம்பு – சேதாரம் பெருசா இருக்குமே!..

சினி நியூஸ்

simbu

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் பொங்கலன்று வெளியாகவுள்ளது. இப்படம் இந்த வருடம் ஏப்ரல் மாதமே வெளியாகவிருந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் ரிலீஸ் தள்ளிப்போனது. ஒடிடி, தியேட்டர் என மாறி மாறி செய்தி வெளிவந்த நிலையில்தான் தற்போது ஜனவரி மாதம் பொங்கலன்று இப்படம் வெளியாகிறது. இப்படம் சுமார் 1000 தியேட்டர்களில் இப்படம் வெளியாகும் எனத்தெரிகிறது.

மாஸ்டர் திரைப்படம் பொங்கல் ரிலீஸ் என்பதால் மற்ற நடிகர்களின் படங்கள் பொங்கல் ரிலீஸிலிருந்து தள்ளிப் போய்விட்டது. ஆனால், நடிகர் சிம்பு தன்னுடைய ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலன்று வெளியாக வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். எனவே, மாஸ்டர் திரைப்படம் ஜனவரி 13 ரிலீஸ் எனில், ஈஸ்வரன் 2 நாட்கள் கழித்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.