ஏப்ரல் 22, 2021, 7:10 மணி வியாழக்கிழமை
More

  ஐம்பொன் முருகர் சிலை திருட்டு!

  Screenshot_2020_0814_124850

  தமிழ்நாட்டில் உலக புகழ்மிக்க ஐம்பொன்னால் ஆன சிலைகள் பல கோவிலில் உள்ளது. பல வெளிநாட்டவர்கள் பார்த்து வியக்கும் அத்தகைய சிலைகள் கடந்த சில ஆண்டுகளாகத் திருடப்பட்டு வெளிநாட்டில் விற்கப்படுகிறது.

  சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் அதிகாரியாக நியமிக்கப்பட்ட பொன்.மாணிக்கவேல் பல்வேறு தமிழக கோவில்கள் சிலையை வெளிநாட்டில் இருந்து மீட்டுக் கொண்டு வந்தார். தற்போது அவரது பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், வேறு ஒரு அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

  சிலைகள் கடத்தலுக்கு எதிரான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்படும், சிலைகள் திருட்டு போவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் திருத்தணி மாநகராட்சியில் உள்ள ராமர் கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு போனது.

  இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியில் இருக்கும் வெற்றி விநாயகர் கோவிலில் ரூ.1 லட்சம் மதிப்பிலான ஐம்பொன் முருகன் சிலை திருடப்பட்டுள்ளது.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கொள்ளையர்களை தேடி வருகின்றனர். தமிழகத்தில் ஐம்பொன் சிலைகளை திருடி வெளிநாடுகளில் விற்கும் கும்பல், இங்கு கைவரிசையை காட்டி இருக்கிறதா எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »