தாயின் கண் முன்னே.. மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு நடந்த அவலம்!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
vankodumai 1 - 2026

டி.பி.சத்திரத்தில், தாய் கண் முன், கத்தி முனையில், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக, மூவரை போலீசார் பிடித்து விசாரிக்கின்றனர்.

சென்னை, டி.பி.சத்திரத்தைச் சேர்ந்த, 22 வயது மனநலம் பாதிக்கப்பட்ட பெண், நேற்று முன்தினம் நள்ளிரவு, தன் தாயுடன் வீlட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது, மது போதையில், மூன்று பேர், அவரது வீட்டிற்குள் புகுந்தனர். ஒருவன், பெண்ணின் தாய் கழுத்தில் கத்தியை வைத்து, அவரை பிடித்துக் கொண்டான். பின், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை, தாய் கண் முன்னே, ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர். சம்பவம் குறித்து, அப்பெண்ணின் தாய், கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில், நேற்று மாலை புகார் அளித்தார்.

வழக்கு பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மூவரை பிடித்து விசாரிக்கின்றனர். அந்த மூவரில் ஒருவர், பெண்ணின் உறவினர் என கூறப்படுகிறது. இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.