இயற்கை உபாதை கழிக்க சென்ற சிறுமி! வீடியோ எடுத்த திமுக நிர்வாகியும்,மகனும்..

சற்றுமுன்
woman

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே 16 வயது சிறுமியை அத்துமீறி செல்போனில் படம் பிடித்த திமுக நிர்வாகி மற்றும் அவரது மகனை போலீசார் தேடி வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை அடுத்துள்ள தென்னம்பட்டி பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி இயற்கை உபாதையை கழிப்பதற்காக அங்குள்ள மந்தைக்குளத்திற்கு சென்றுள்ளார். அங்கு சட்டவிரோதமாக, மணல் கொள்ளையில் ஈடுப்பட்டு கொண்டிருந்த சொட்டமாயனூரைச் சேர்ந்த திமுக நகர விவசாயி அணி அமைப்பாளர் வி.சி. ராஜேந்திரன் என்பவரின் மகனான பாண்டியராஜன் மற்றும் சேரன் ராஜ் ஆகியோர் சிறுமியை செல்போனில் தவறாக படம் எடுத்துள்ளனர்.

இதனை கண்ட சிறுமி, அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டதில், அக்கம் பக்கத்தினர் ஓடிச் சென்று பாண்டியராஜனுக்கு தர்ம அடி கொடுத்துள்ளனர்.இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த திமுக நிர்வாகி வி.சி.ராஜேந்திரன், பொது மக்களுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதோடு, ஜாதியின் பெயரை கூறி திட்டியதாகவும் கூறுகின்றனர்.

தகவலறிந்து வந்த வடமதுரை காவல்த்துறையினர் மணல் கடத்தலில் ஈடுப்பட்ட சேரன் ராஜ் மற்றும் முத்துக்குமார் என்பவரை கைது செய்தனர். இதையடுத்து, தப்பிசென்ற திமுக நிர்வாகி வி.சி. ராஜேந்திரன் மற்றும் அவரது மகன் பாண்டியராஜனை போலீசார் தேடி வருகின்றனர்.

ALSO READ:  2047ம் ஆண்டுக்குள் நாம்... : 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி சொன்ன விஷயம்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.