December 6, 2025, 3:59 AM
24.9 C
Chennai

வைராக்கியத்தை எப்படி வளர்த்து கொள்வது?

bharathi theerthar

ஆசையை வெல்வது எப்படி

இந்தப் பொருள் மிகவும் உயர்ந்தது என்ற அறிவினால் தான் ஒரு பொருளில் நமக்கு ஆசை வருகிறது நாம் எவ்வளவோ பொருட்களை பார்க்கிறோம் நம் கண்ணுக்கு அது சுபாவும் பொருளைப் பற்றிய அறிவை நமக்கு கொடுக்கும்.

ஆனால் நம் கண்கள் எவ்வளவு பொருட்களை பார்த்தாலும் பார்த்த எல்லா பொருட்களையும் விரும்புவதில்லை எதனால் விரும்புவதில்லை என்றால் எந்த பொருட்கள் எல்லாம் உயர்ந்தவை என்கிற அறிவு வருகிறதோ அந்த பொருட்களை மட்டுமே விரும்புகிறோம்

இந்த உலகத்திலுள்ள பொருட்கள் எதுவும் இருந்ததில்லை என்கிற மனநிலை யாருக்கு வருகிறதோ அவன் எந்த பொருளை தான் விரும்புவான்? அதனால் காமத்தை ஜெயிக்க வேண்டுமென்றால் உலகத்தில் இருப்பதெல்லாம் சுவையற்றது என்ற மன நிலை வர வேண்டும்

நல்ல ருசியான மாங்கனிகள் பிற்காலத்தில் கிடைக்கும் என்று ஒருவன் மாஞ்செடி நடுகிறான் ஆனால் அது பழம் கொடுக்கும் சமயத்தில் நல்ல நிழலையும் கொடுக்கிறது

பெரிய மரமாகி நிழல் கொடுக்க வேண்டும் என்றுதான் நினைப்பார் பூரண நம்பிக்கையுடன் சாத்வீகசெடியை வளர்த்தால் ஈஸ்வர அனுக்ரஹம் என்ற நல்ல பழம் கிடைப்பதோடு ஞானம் என்ற நிழலும் தானே கிடைக்கின்றது.

தியானம் செய்வதற்கு இன்றியமையாதது மனதை அடக்குவதே ஆகும் கீதையில் அர்ஜுனன் மனதின் அலைபாயும் தன்மையை குறித்து கிருஷ்ணரிடம்.. கிருஷ்ணா, மனம் மிகவும் சஞ்சலம் வாய்ந்ததாக இருக்கிறது அது பலம் உடையதாகவும் இருக்கிறது காற்றை அடக்குவதை காட்டிலும் கடினமாக இருக்கிறதே என்று கேட்கிறான்.

பகவான் அதற்கு சந்தேகமில்லை குந்தி மகனே மனதை அடக்குவது கடினம் ஆனால் அதை அப்பியாசம் மூலமாகவும் வைராக்கியம் மூலமாகவும் அடக்கலாம் என்று கூறுகிறார் மனதை அடக்க மீண்டும் மீண்டும் முயற்சி செய்வதே அப்பியாசம் என்று கூறப்படுகிறது வைராக்கியம் என்றால் எப்போது ஒருவனுக்கு லௌகீக சொர்க்க இன்பங்களில் பற்றுதல் அற்றுப் போகிறது.

அப்போது அவனுக்கு வைராக்கியம் இருக்கிறது என்று சொல்லலாம் வைராக்கியம் ஆன்மீக வாழ்விற்கு ஒரு அஸ்திவாரம் போல் விளங்குகிறது வைராக்கியம் மிகுந்த வாழ்வு தான் மிகவும் சிறந்தது வைராக்கியம் உள்ளவருக்கு மனம் கட்டுக்கு அடங்கும் வெளியுலக இன்பங்களில் திரியாது வைராக்கியம் ஏற்படுவதற்கும் அப்ஹயாஸந்தான் இன்றியமையாதது அப்யாஸங்கள் செய்தால் உடல் வலுவுடன் விளங்குவது போல் மனம் செம்மையாக செயல்படும் அப்பியாச முறைகள் இருக்கின்றன.

வைராக்கியம் பல வழிகளில் ஏற்படலாம் ஒருவனுக்கு மிகவும் பிடித்தமான உறவினர் யாரேனும் இறந்துவிட்டால் அந்த சமயத்தில் அவனுக்கு இவ்வுலகத்தில் இனிமேல் என்ன இருக்கிறது எதுவுமே நிலையில்லை ஒன்றுமே வேண்டாம் என்று தோன்றலாம் ஆனால் இதுபோன்று வைராக்கியம் நிலைத்து நிற்காது.

வைராக்கியம் நிலைத்து நிற்க வேண்டுமானால் அது விவேகத்தில் இருந்து உருவாகி இருக்க வேண்டும் எது என்று அறிந்து கொண்ட மனப்பான்மைதான் விவேகம் அப்படி விவேகத்தின் மூலமாக ஏற்படும் வைராக்கியம் நிலைத்து நிற்கும் இந்த மாதிரியான விவேகம் ஏற்படுவது சற்று கடினமானதாக இருக்கலாம்.

ஆகவே எந்த பொருளில் இருந்தும் எனக்கு இன்பமே கிடையாது என்று எண்ணுவது சுலபமாக இருப்பது அதனால் இவ்வகை வேகத்தின் மூலமாக ஒருவன் வைராக்கியத்தை வளர்த்துக்கொள்ளலாம் சிலருக்கு இப்பொழுது ஒரு சந்தேகம் எழலாம் தின்பண்டம் இல்லாத சமயத்தில் வேறொரு பொருளால் இன்பம் கிடைக்கிறது ஆகவே ஒரு பொருள் மட்டும் தனியாக காரணம் ஆகாவிட்டாலும் எல்லா பொருட்களையும் சேர்த்து பார்த்தோமானால் அதை ஏன் அவன் இன்பத்திற்கு காரணமாகக் கூடாது என்று சந்தேகம் எழலாம்.

இது சரியான நிலை அல்ல ஒரு பொருளை ஒருவன் விரும்பும் போது அவன் மனதில் ஆசைகள் இருப்பதால் அவன் மனம் தத்தளித்து கொண்டிருக்கிறது அமைதி இல்லாமல் இருக்கிறது ஆகவே அந்த சமயத்தில் இன்பம் இல்லாமல் இருக்கிறது வேண்டிய பொருள் கிடைத்தவுடன் அந்த ஆசை அடங்குகிறது.

அதனால் மனம் அமைதி பெறும் இந்த அமைதி நாள் தான் இன்பம் அனுபவிக்கிறான் இவ்வாறு நடந்து முடிந்த உடன் அவனுக்கு மேலும் ஒரு ஆசை ஏற்பட்டு அவன் உணர்ந்த இன்பம் போய்விடுகிறது அதே கிடைத்தவுடன் மன அமைதி பின் இன்பம் என்று இந்தச் சக்கரம் சுற்றிக் கொண்டே இருக்கிறது சாமானியமாக மனிதன் இரண்டு ஆசைகளுக்கு இடைவெளி இருப்பதை கவனிப்பதில்லை.

அதனால் இந்த இன்பம் மன அமைதி இருந்தால் தான் ஏற்படுகிறது என்று அவன் தெரிந்து கொள்வதில்லை மேலும் பொருட்கள் தான் இன்பதற்கு காரணம் என்று தவறான எண்ணத்திற்கு ஆளாகிறான் மன அமைதி, தான் இன்பம் வரும் பொருட்களினால் அல்ல என்று ஒருவன் தெரிந்துகொண்டால் வைராக்கியம் பெறலாம்.

இதிலிருந்து ஆசைகளை தவிர்த்து மன அமைதி பெறலாம் வைராக்கியம் உள்ள மனதால் தியானம் செய்வதற்கு ஏற்றது வைராக்கியம் உள்ளவன் முயற்சி செய்து தியானத்தில் உத்தம நிலையை அடையலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories