மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் !

சற்றுமுன்
 
மதுரையில் தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞரை பணிசெய்ய விடாமல் தடுத்து திட்டி தாக்கி அவரது உடமைகளை பறிமுதல் செய்த காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் அளித்துள்ளது .
 
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில் கதிர் அறுப்பு வைபவ விழா இன்று 23-01-2016 நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் அருள்மிகு மீனாட்சி அம்மன் சுவாமி வீதி உலா மேல அனுப்பானடி பகுதியில் சென்று கொண்டு இருந்ததுஅந்த நிகழ்வை மதுரை தினதந்தி பத்திரிகையின் புகைப்படக்கலைஞர் சரவணன் இன்றுசுமார் காலை 11.45 மணி அளவில் புகைப்படசெய்தி பதிவு செய்ய சென்றார்.
 
அப்போது அவனியாபுரம் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணியாற்றும் சேதுமணி மாதவன் என்பவர் அநாகரீகமான தகாத வார்த்தைகளை பயன்படுத்தி சரவணனை நீ பத்திரிகையில் வேலைபார்த்தால் என்ன பெரிய …… ( பதிவிட முடியாதா வார்த்தைகள்) திட்டி தாக்கி அவரை பணிசெய்ய விடாமல் தடுத்து நீ என்னை ஒன்றும் புடுங்க முடியாது, என்று மிரட்டல் விடுத்துள்ளார்.மேலும் அவரது புகைப்படக்கலைஞரின் இரு சக்கர மோட்டார் சைக்கிள், ஏடிஎம் கார்டு, மணி பர்ஸ், மற்றும் தினதந்தி பத்திரிகையால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, ஆகியவற்றை பறிமுதல் செய்து சென்று விட்டார்.
 
இந்த நிலையில் காவல்ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மதுரை காவல் ஆணையாளரிடம் தினதந்தி நிர்வாகம் புகார் அளித்துள்ளது .
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.