கறிக்கடை கத்தியால் காதலியின் தந்தையை வெட்டிக் கொலை!

கிரைம் நியூஸ் சற்றுமுன் தமிழகம்
murder-2-1

செங்கல்பட்டு அடுத்த இருங்குன்றப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தணிகைமணி. 42 வயதாகிறது. ஒரு பிரைவேட் ஸ்கூலில் பஸ் டிரைவராக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி பெயர் காயத்திரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

மகள் பெயர் கீர்த்திகா. காலேஜ் படிக்கிறார். இவரை சிலம்பு என்ற இளைஞர் காதலித்து வந்தார். சிலம்பு அதே பகுதியில் ஒரு கறிகடையில் வேலை பார்க்கிறார். இத ஒரு தலைக்காதல். கீர்த்தனாவை பார்க்கும்போதெல்லாம் தன் லவ்வை சொல்லி, தினமும் டார்ச்சர் தந்துள்ளார்.

இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கீர்த்தனா, தன் அப்பாவிடம் இதை சொல்லிவிட்டார். இதனால், ஆத்திரமடைந்த தணிகைமணி, சிலம்பை நேரில் சந்தித்து, இதை பற்றி கேட்டார். அப்போது 2 பேருக்கும் தகராறு முற்றிவிட்டது. ஒரு கட்டத்தில் சிலம்புவின் கன்னத்தில் பளார் என அறைவிட்டார் தணிகைமணி.

அப்போதிருந்து இந்த விரோதம் இன்னும் அதிகமாகிவிட்டது. அதனால், தணிகைமணியை கொல்ல முடிவு செய்தார் கறிக்கடைகாரர் சிலம்பு.‌தன் நண்பர்கள் விஜி, அக்கு ஆகியோரை துணைக்கு அழைத்தார். இந்நிலையில், நேற்று செங்கல்பட்டில் இருந்து பைக்கில் வீட்டுக்கு தணிகைமணி சென்று கொண்டிருந்தார்.

இருங்குன்றபள்ளி அருகே சென்றபோது, அங்குதான் சிலம்புவும் அவரது நண்பர்களும் ஒளிந்து கொண்டிருந்தனர். பைக்கில் இவர் வருவதை பார்த்ததுமே 3 பேரும், அவரை மறித்து, கறி வெட்டும் கத்தியால் தணிகைமணியை சரமாரியாக வெட்டினர். இதில், தணிகைமணி ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்தார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலில் பிரமோத்ஸ்வம் தொடக்கம்!

பிறகு அந்த கும்பல் தப்பிவிட்டது. தகவலறிந்து செங்கல்பட்டு தாலூகா போலீசார் தணிகைமணியை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனாலும் தணிகைமணியை காப்பாற்ற முடியவில்லை. தற்போது தலைமறைவாகி விட்ட கறிக்கடை சிலம்பு, நண்பர்கள் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.