ஸ்ரீவில்லிபுத்தூர் கோவிலில் அன்னதான கூடம்! முதல்வர் திறந்து வைப்பு!

சற்றுமுன் தமிழகம்
Screenshot_2020_0814_173102

ஸ்ரீவில்லிபுத்தூரில் ரூ.50 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட அன்னதான கூடத்தை காணொலி காட்சி மூலம் முதலமைச்சர் திறந்து வைத்ததை சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பல நூறு ஆண்டு பழமை வாய்ந்த மடவார் வளாகம் வைத்தியநாதசுவாமி திருக்கோவில் உள்ளது. இந்தக் கோவிலுக்கு அறநிலை துறை சார்பில் தினசரி 100 பேருக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தற்போது உணவு பொட்டலமாக வருகிறது.

இக்கோயிலில் புதிதாக அன்னதான கூடம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று 50 லட்சம் மதிப்பில் அன்னதான கூடம் கட்டி முடிக்கப்பட்டது.

இக்கூடத்தை முதல்வர் பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்து வைத்ததை அடுத்து சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரபா கணபதிபூஜை மற்றும் சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் விருதுநகர் உதவி ஆணையர் கணேசன், இலாகா பொறியாளர் ரவிச்சந்திரன், சரக ஆய்வாளர் பாண்டியன், தக்கார் இளங்கோவன், செயல் அலுவலர்கள் ஜவகர், கலாராணி, மகேந்திரன், ஒன்றிய செயலாளர்கள் முத்தையா, மயில்சாமி, நகர செயலாளர் இன்பத்தமிழன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்; சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.