குஷ்புவுக்கு தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி: மேலிடம் முடிவு?

Published:

KUSHBOOசென்னை: தமிழக மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி குஷ்புவுக்கு கொடுக்கப்படலாம் என்று செய்திகள் வெளியாகின. தற்போது மகளிர் காங்கிரஸ் தலைவராக உள்ள சாய்லெட்சுமியின் பதவிக்காலம் விரைவில் முடிகிறது. எனவே, புதிய நபரை அப்பதவியில் நியமிப்பது தொடர்பாக கட்சி மேலிடம் ஆலோசித்து வருகிறது. இந்நிலையில், அண்மையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த நடிகை குஷ்புவுக்கு இதுவரை கட்சிப் பதவி எதுவும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவியைப் பிடிக்க குஷ்பு மட்டுமின்றி, விஜயதாரணி எம்.எல்.ஏ, முன்னாள் எம்.எல்.ஏ யசோதா, ஹசீனா சையத், ராணி வெங்கடேசன், காங்கிரஸ் தேசியச் செயலாளர் ஜோதிமணி உள்ளிட்டோரும் போட்டியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, காங்கிரஸ் கட்சியில் கூட்டம் சேர்க்கும் நட்சத்திரப் பேச்சாளராக குஷ்பு உள்ளதால், அவருக்கே மகளிர் காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப் படக் கூடும் என்று தெரிகிறது. முன்னதாக, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குஷ்புவுக்கு நிச்சயம் அமைச்சர் பதவி வழங்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அறிவித்தார்.

ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img