அறந்தாங்கி அருகே கோயில் விழாவில் பிரச்னை வராமல் இருக்க 144 தடை உத்தரவு

Published:

dinasari - 2026

அறந்தாங்கி
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் இரு தரப்பினரிடையே
ஏற்பட்ட பிரச்னை காரணமாக சட்டம் ஒழுங்கு கருதி அதிகாரிகள் கோயில்
கும்பாபிஷேகத்தை நிறுத்தி 144 தடை உத்தரவினை பிறப்பித்தனர்.
அறந்தாங்கி அருகே கொத்தங்குடியில் பழமையான புலிக்குட்டி அய்யனார்கோயில் உள்ளது
இக்கோயிலில் முற்றிலும் திருப்பணி நடந்தது அதனை தொடர்ந்து கோயிலில் உள்ள
பூரணா புஷ்கலா சமேத புலிக்குட்டி அய்யனார்கோயில் உள்ளது இக்கோயிலில்
மகாகணபதி,சுப்ரமணியர்,பூரண புஷ்கலா சமேத புலிக்குட்டி
அய்யனார்,அரசமுகம்,சன்னாசி
ஆகோரவீரபத்திரர்,சின்னகருப்பர்,பெரியகருப்பர்,காளியம்மன்,சாம்பான் ஆகிய
தெய்வங்களுக்கு தனிச்சன்னதிகள் அமைக்கப்பட்டு யாகவேள்வி தொடங்கியது யாகவேள்வி
கடந்த 13ந்தேதி தொடங்கிய நிலையில் கோயில் கட்டுமான பணிகள் தொடர்பாக இரு
தரப்பினருக்கு பிரச்னைஏற்பட்டது இந்த பிரச்னையை சரி செய்ய வருவாய்துறை
சார்பில் ஆர்டிஒ சரவணன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் பலன் இல்லாமல் போகவே
இரு தரப்பினருக்கிடையே மோதல் வராமல் தடுக்கவும் அமைதியை நிலைநாடடவும் சட்டம்
ஒழுங்கு கருதியும் 14ந்தேதி முதல் 28ந்தேதி வரை 144 தடை உத்தரவு
பிறப்பிக்கப்பட்டது இதன் காரணமாக இன்று 15ந்தேதி நடைபெறவிருந்த
கும்பாபிஷேகம்நடைபெறவில்லை.தற்போது மேலும் அசாம்பாவிதங்கள் வராமல் இருக்க
அறந்தாங்கி போலீசார் கோயில் முன்பே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ALSO READ:  சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img