தமிழகத்தில் இன்று… 5,996 பேருக்கு கொரோனா; 102 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம் லைஃப் ஸ்டைல்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5,996 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,09,238ஆக  உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று  5,752 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,49,682 ஆக உயர்ந்துள்ளது 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேர்  உயிரிழந்துள்ளனர் தமிழகத்தில் கொரோனா   உயிரிழப்பு எண்ணிக்கை 7,050ஆக  அதிகரித்துள்ளது

சென்னையில் இன்று 1296 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி  செய்யப்பட்டது இதையடுத்து சென்னையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,31,869ஆக  உயர்ந்துள்ளது

இன்று ஒரே நாளில் 75,103 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டுள்ளது இதுவரையில் தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை: 44,20,697  இன்று சுகாதார துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

 சென்னையை அடுத்து உள்ள மாவட்டங்களான திருவள்ளூர் மாவட்டத்தில்  298 பேருக்கும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 296 பேருக்கும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 194 பேருக்கு இன்று கொரோனா உறுதி செய்யப்பட்டது 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்

district-wise-corona-aug-28
district-wise-corona-aug-28

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.