ஏப்ரல் 22, 2021, 6:49 மணி வியாழக்கிழமை
More

  சிறுமியை கடத்தி, தாலி கட்டி 3 நாட்களாக பலாத்காரம்!

  pasupathi

  17 வயது சிறுமியை ஏமாற்றி தாலிகட்டி பாலியல் பலாத்காரம் செய்த நபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைதுசெய்தனர்.

  திண்டுக்கல் மாவட்டம் கொடைரோடு பகுதியில் வசித்துவரும் முருகேசன் என்பவர் கொடைரோடு பேருந்து நிலையம் அருகே காய்கறிக் கடை வைத்துள்ளார். இவருக்கு சினேகா என்ற மனைவியும் 3 பெண் பிள்ளைைகளும் உள்ளனர். இவரது 3 மகள்களும் அந்த பகுதியிலுள்ள தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர்‌. இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் முருகேசனின் 17 வயதான 2ஆவது மகள் அவருக்கு உதவியாக காய்கறிக் கடையில் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

  இந்த சூழலில் கடந்த 22ஆம் தேதியன்று தனது 2ஆவது மகளை காணவில்லை என முருகேசன் அம்மையநாயக்கனூர் போலீஸ் ஸ்டேஷனில் புகாரளித்துள்ளார்.

  இதற்கிடையே கடந்த 25ஆம் தேதியன்று சிறுமி அழுதபடியே கழுத்தில் தாலியுடன் வீட்டுக்கு வந்துள்ளார்.

  அவரிடம் என்ன நடந்தது என கேட்டபோது, கடையிலிருந்து வீட்டில் இறக்கிவிடுவதாக பைக்கில் ஏற்றிச்சென்ற பள்ளப்பட்டியைச் சேர்ந்த மயில்சாமியின் மகன் பசுபதிராஜா (வயது 24) என்பவர் தனது வீட்டுக்குள் அடைத்துவைத்து வலுக்கட்டாயமாகத் தாலிகட்டி 3 நாட்களாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறினார்‌.

  பின்னர் ஜாதி பெயரைக் குறிப்பிட்டு தரக்குறைவாகப் பேசி ‘நீ இங்கிருந்து ஓடி விடு’ என்று மிரட்டி மதுரை – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் இறக்கிவிட்டுச் சென்றதாக சிறுமி அழுதபடியே கூறியதால் பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.

  புகாரின் அடிப்படையில், அம்மையநாயக்கனூர் போலீசார் நடத்திய விசாரணையில், விவசாயம் செய்துவரும் பசுபதி, தன்னுடைய விவசாய நிலத்தில் விளையும் பொருள்களை தினந்தோறும் கொடைரோடு சந்தைக்கு கொண்டு வருவதும் வழக்கம்‌. அப்படி அடிக்கடி வரும்போது காய்கறிக் கடையில் இருந்த சிறுமியிடம் அன்பாக பேசிப் பழகியுள்ளார்‌. சம்பவ தினத்தன்று சிறுமியை அவரது வீட்டில் கொண்டு போய்விடுவதாகக் கூறி தன்னுடைய சொந்த ஊரான பள்ளப்பட்டி ஆறுமுகநகருக்கு அழைத்துச் சென்று வலுக்கட்டாயமாக வீட்டினுள் அடைத்து வைத்து, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தாலி கட்டிவிட்டு சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்‌.

  இதையடுத்து பசுபதி ராஜாவின் சொந்த ஊரான பள்ளப்பட்டிக்கு தேடிச்சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், பசுபதிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது தெரியவந்தது. மேலும் பசுபதி பற்றி விசாரணை நடத்தியபோது 3 தினங்களுக்கு மேலாக வீட்டுக்கு வரவில்லை எனவும், செல்போனை சுவிட்ச் ஆப் செய்து வைத்துள்ளார் எனவும் கூறியுள்ளனர். அதனைத் தொடர்ந்து செல்போன் சிக்னலை வைத்து பசுபதி திண்டுக்கல்லில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

  திண்டுக்கல்லில் உள்ள வேறொரு பெண்ணின் வீட்டில் தலைமறைவாகியிருந்த பசுபதியை போலீசார் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர். அப்போது அந்த இளம்பெண்ணையும் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவார்த்தை கூறி அங்கு தங்கியிருந்ததால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.

  எனவே உடனடியாக அவரை கைதுசெய்த அம்மையநாயக்கனூர் போலீசார், காவல் ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான தனிப்படையினர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டம், போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திண்டுக்கல் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.

  இதனிடையே 2 பிள்ளைகளின் தகப்பன் மனைவியுடன் வாழ்ந்துவரும் போதே 17 வயது சிறுமியை ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்தது மட்டுமல்லாமல் வேறொரு பெண்ணையும் திருமணம் செய்வதாக ஏமாற்றிய சம்பவம் அந்தபகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »