நீங்க தரலைன்னா யார் தருவாங்க.. கெஞ்சும் காவலர்கள்! வைரல் வீடியோ!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
traffic

தேனி மாவட்டத்தில் போலீசார் காய்கறி வண்டிகளை மறித்து பணம் கேட்டு கெஞ்சும் வீடியோ வைரலாகி வருகிறது.

தேனி மாவட்டம் தேவதானம்பட்டி அருகே உள்ள சோதனைச் சாவடி உள்ளது. அந்த வழியில் தினமும் காய்கறிகள் எடுத்துச் செல்லும் வாகனம், சரக்கு வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்கள் அதிகளவில் செல்லும்.

இதனை பயன் படுத்தி அங்கு பணியில் இருந்த போலீசார் அவ்வழியே செல்லும் வாகனத்தை வழி மறித்து பணம் வசூலிக்கும் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த வழியில் சரக்குகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தை நிறுத்தி அவர்களிடம் பணம் கேட்டு தராவிட்டால் சினிமா படங்களில் வடிவேலுவின் நகைச்சுவை காட்சி போல் நீங்க தராவிட்டால் எங்களுக்கு யார் தருவது என்று அவர்களிடம் கெஞ்சிக் கேட்டுள்ளனர்.

இந்த வீடியோ தற்போது சமூகவலை தளங்களின் வைரலாகி வருகின்றது.

சில நாட்களுக்கு முன்னர் சரக்கு வாகனத்தில் வந்தவரிடம் எஸ்.ஐ பணம் கேட்ட சம்பவம், சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

தற்போது இவ்வாறு காய்கறி வண்டிகளை மறித்து கெஞ்சி பணம் கேட்கும் போலீசாரின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எங்க பொழப்பு வடிவேலு காமெடி போல ஆகிடுச்சு. பணம் தராவிட்டால் கொஞ்சம் காய்கறியாவது கொடுங்கள்.” என கெஞ்சும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.