நாலு இட்லிக்கு பத்து ரூபா: வைரலாகும் மோடி இட்லி!

சற்றுமுன் தமிழகம் லைஃப் ஸ்டைல்
modi-idli

சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மோடி இட்லி என்ற பெயரில் விளம்பர அறிவிப்புகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

சேலம் நகர் வீதி, சின்னக்கடை வீதி, பழைய பேருந்து நிலையம், புதுப்பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, சூரமங்கலம், மற்றும் செவ்வாய்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பிரதமர் மோடி பெயரில் இட்லிக்கான விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.

பாஜகவின் பிரச்சார அணி மாநில துணைத்தலைவர் மகேஷ் பெயரை மேலே அச்சிட்டு, ரூ. 10க்கு நான்கு இட்லிகள் அதுவும் சாம்பாருடன் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு தளர்வுகள் முழுமையாக நீக்கப்பட்ட பிறகு சேலம் செல்லும் நபர்களுக்கு எல்லாம் மோடி இட்லி தான் ஃபேவரைட் இடமாக இருக்கும் என்பதில் ஆச்சரியம் இல்லை தான்.

ஆரோக்கியமானது. சுகாதாரமானது, சுவையானது, தரமானது மற்றும் அதிநவீன கருவிகள் கொண்டு உருவாக்கப்படுகிறது என்றும் அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இந்த கடை திறக்கப்படும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்

ALSO READ:  அருந்தமிழ் 50: திறனாய்வு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.