தமிழகத்தில் இன்று… 5,928 பேருக்கு கொரோனா; 96 பேர் உயிரிழப்பு!

சற்றுமுன் சென்னை தமிழகம்
கொரோனா விவரம்
கொரோனா விவரம்

தமிழகத்தில் இன்று 5928 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது; இதை அடுத்து தமிழகத்தில்  கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,33,969ஆக உயர்வு கண்டுள்ளது. 

சென்னையில் இன்று 1084 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது. இதனால் சென்னையில் இதுவரையிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கை  1,36,697ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 96 பேர் உயிரிழந்துள்ளனர். இதை அடுத்து, தமிழகத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 7,418ஆக அதிகரித்துள்ளது. 

தமிழகத்தில் இன்று 6,031 பேர் கொரோனா தொற்றில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் ஆகி வீடு திரும்பினர். இதனால் தமிழகத்தில் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை: 3,74,172 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில், இன்று ஒரே நாளில் 75,165 மாதிரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ளது.  இதுவரை மேற்கொள்ளப்பட்ட தனிநபர் கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 47,26,022 ஆக அதிகரித்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு விவரம்.:

districtwise-corona-details-sep-01
districtwise-corona-details-sep-01

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.