பிப்ரவரி 24, 2021, 10:33 மணி புதன்கிழமை
More

  மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

  Home சற்றுமுன் மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

  மாமியார், மருமகள் அடுத்தடுத்து மின்சாரம் தாக்கி உயிரிழப்பு!

  shock

  மின்சாரம் பாய்ந்து மாமியார் மற்றும் மருமகள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

  புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் நேற்று இரவு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்த நிலையில்,65 வயதுடைய ராஜ கோகிலா தனது வீட்டுத் தொட்டியில் மின் வயர் அறுந்து கிடந்தது தெரியாமல் தொட்டியின் அருகே சென்றபோது, மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

  அதனைத்தொடர்ந்து, இதனைஅவரின் மருமகள் ராதிகா (31) தண்ணீர் எடுப்பதற்காகச் சென்ற தனது மாமியாரைக் காணவில்லை என்று தொட்டியின் அருகில் சென்றுள்ளார்.

  அங்கு மாமியார் ராஜ கோகிலா விழுந்து கிடப்பதைப்பார்த்த ராதிகா அவரைத் தூக்க முயற்சி செய்துள்ளார்.

  இதில், ராதிகாவும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தநிலையில், தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அறந்தாங்கி போலீசார், இருவரது உடல்களையும் கைப்பற்றி அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

  மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Support Us

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari