அனிதா மரணம் தொடர்பில் உண்மை என்ன?: ஆணைய து.தலைவர் விளக்கம்

Published:

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர் என்று கூறியுள்ளார் தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன்.

அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர் எஸ்.பி-யிடம் கேட்டுள்ளோம்  என்றும், படிப்பை தேர்வுசெய்ய அனிதா தயாராக இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது சந்தேகம் அளிக்கிறது என்றும் கூறினார் முருகன்.

தேசிய ஆதிதிராவிடர் ஆணைய துணைத் தலைவர் முருகன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்…

அனிதா மரணம் தொடர்பாக காவல்துறையினர் இடைக்கால அறிக்கை மட்டுமே தந்துள்ளனர். அனிதா மரணம் தொடர்பாக 15 நாட்களுக்குள் முழுமையான அறிக்கையை அளிக்க அரியலூர் எஸ்.பி-யிடம் கேட்டுள்ளோம். வேறு படிப்பை தேர்வுசெய்ய அனிதா தயாராக இருந்தபோதிலும் அவர் தற்கொலை செய்துகொண்டது சந்தேகம் அளிக்கிறது. அனிதா மரணத்திற்கு வெளிப்புற அழுத்தம் காரணமா என்ற சந்தேகம் உள்ளது. வேளாண் படிப்பிற்கு தயாரான சூழலில் அனிதா மரணத்திற்கு காரணம் என்னவென்று விசாரிக்கிறோம். அனிதா தற்கொலைக்கு தூண்டப்பட்டுள்ளாரா என விசாரிக்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அகில இந்திய அளவில் மாணவர்கள் போட்டியிட நீட் தேர்வு தேவை . கல்வியில் எஸ்டி, எஸ்சி மாணவர்களுக்கு 18% இட ஒதுக்கீடு தொடர்பாக ஆய்வு செய்துள்ளோம். அனிதா மரணம் தொடர்பாக அறிக்கை வந்தவுடன் தமிழக அரசுக்கு அறிக்கை வழங்கப்படும் என்று அவர் கூறினார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

Related articles

Recent articles

spot_img