கொரோனாவை பயன்படுத்தி… படுபயங்கர ஊழல்: ஹெச்.ராஜா ‘பகீர்’ குற்றச்சாட்டு!

சற்றுமுன் மதுரை
hraja-interview
hraja-interview

காரைக்குடி: தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றை பயன்படுத்தி பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் ஊழலில் ஈடுபடுவதாக பாஜக., தேசிய செயலர் ஹெச் ராஜா செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் ஹெச் ராஜா, அனைத்து ஏழை மக்களுக்கும் கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்த பின்பு இலவசமாக வழங்கப்படும்.

தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகள் கொரோனா தொற்றை பயன்படுத்தி பொதுமக்களிடம் பல லட்ச ரூபாய் ஊழலில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டுகள் கூறப் படுகின்றன. தனியார் மருத்துவமனைகள் மீது தமிழக அரசு இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!

பிரதமரின் கிஸான் சம்மான் திட்டத்தில் முறைகேடு செய்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெயரை வெளியிட வேண்டும்! அவர்கள் கழுத்தில் ஊழல்வாதி என்று போர்டு தொங்கவிட்டு வீதியில் அனைவரும் பார்க்கும் வண்ணம் ஊர்வலம் விடவேண்டும் என்று காட்டமாக விமர்சித்தார்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.