ஏப்ரல் 23, 2021, 8:12 காலை வெள்ளிக்கிழமை
More

  மதுரையில் பிரதமர் மோடி 70வது பிறந்த நாள் கொண்டாட்டம்!

  மதுரை மாநகர் பரவை மண்டல பாஜக சார்பாக பிரதமர் மோடி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது

  madurai-bjp-releasing-pegion
  madurai-bjp-releasing-pegion

  பிரதமரின் 70வது பிறந்தநாளையொட்டி அமைதியை குறிக்கும் வகையில் மதுரை ஆனையூரில் பாஜக சிறுபான்மை பிரிவு சார்பாக70 புறாக்கள் பறக்கவிடப்பட்டன மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன

  மதுரை மாவட்ட பாஜக சிறுபான்மையினர் அணி சார்பில் பிரதமர் மோடியின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு அமைதியை குறிக்கும் வகையில், பிரதமர் மோடிக்கு நவீன இந்தியாவின் தேசத் தந்தை என்று பட்டம் வழங்கினர். பிரதமரின் 70ஆவது வயதை குறிக்கும் வகையில் 70 புறாக்களை பறக்க விட்டு இனிப்பு வழங்கி பிறந்த நாள் விழா கொண்டாடினர்.

  மதுரை புறநகர் மாவட்ட சிறுபான்மை அணி மாவட்ட தலைவர் வேதகிரி சாலுக்கா தலைமையில் புறநகர் மாவட்ட செயலாளர அனு ஷர்மிளா ஏற்பாட்டில் அமைதியை நிலைநாட்டி நவீன இந்தியாவின் தந்தை என்று அழைக்கப்படும் பிரதமர் நரேந்திர மோடி 70வது பிறந்த நாள் விழாகொண்டாடப்பட்டது

  இந்த விழாவில் மாவட்ட துணை தலைவர் ஜான் கருப்பையா ஹரிச்சந்திரன் பாலா பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் மற்றும் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்..

  madurai-bjp-modi-birthday
  madurai-bjp-modi-birthday

  மதுரை மாநகர் பரவை மண்டல பாஜக சார்பாக பிரதமர் மோடி பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது

  மதுரை மாநகர் மேற்கு தொகுதிக்குட்பட்ட ஊர் மச்சிகுளம் கிராமத்தில் பாஜகவினர் பாரத பிரதமர் மோடி எழுபதாவது பிறந்த தின விழாவை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி மாஸ்க் வழங்கினார்கள்

  இதில் மண்டல தலைவர் ரமேஷ் கண்ணா நகர் மாவட்ட தலைவர் கே கே சீனிவாசன் ஊரக வளர்ச்சி குழு செயலாளர் அமுதன் மண்டல நிர்வாகிகள் வீரக்குமார் ஜெகநாதன் மகளிரணி செயலாளர் ராதா அமைப்புசாரா செயலாளர் இருளப்பன் ரமணி துணைத்தலைவர் பிரபாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்

  இதேபோல் கோவில் பாப்பாகுடி கிராமத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து 100 பேர் பாஜகவில் இணைந்தனர் அவர்களுக்கு கட்சி சார்பாக சேலைகள் வழங்கினார்கள் இதேபோல் துவரிமான் கீழமாத்தூர் மேலமாத்தூர் கொடிமங்கலம் அச்சம்பத்து புதுக்குளம் காமாட்சிபுரம் பறவை உள்பட இப்பகுதியில் பாஜகவினர் கொடியேற்றி இனிப்பு வழங்கினார்கள்

  bjp-partymen-demanding-pm-picture
  bjp-partymen-demanding-pm-picture

  மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய பிரதமர் மோடியின் உருவப்படத்தை வைக்கக் கோரி, மோடியின் திருஉருவப்படத்துடன் வந்த பாஜக ஒபிசி அணியின் நிர்வாகி மோகன்குமார் மற்றும் பாஜகவினர்.

  • செய்தி: ரவிச்சந்திரன், மதுரை

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,233FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-