கோயில் இடத்தை தனிநபருக்கு பட்டா போடுவதா?! இந்து முன்னணி புகார்!

சற்றுமுன் நெல்லை புகார் பெட்டி லைஃப் ஸ்டைல்
tenkasi-hm-complaint
tenkasi-hm-complaint

தென்காசி மாவட்டம், செங்கோட்டை தாலுகா, புதூர் கிராமத்தில் அமைந்திருக்கும் பிள்ளையார் கோவிலின் இடங்களை தனிநபர் அபகரித்து அதற்கு பட்டா கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைத்தனர்.

இந்த தகவல் இந்து முன்னணிக்கு கிடைத்தது. உடனடியாக இன்று 07.10.2020 மாலை மாவட்ட ஆட்சியரிடம் இந்து முன்னணி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இசக்கிமுத்து, மாவட்ட பொதுச் செயலாளர்- வழக்கறிஞர் பிரிவு வெங்கடேஷ், நகர தலைவர் நாராயணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உடன் தனி நபருக்கு பட்டா வழங்கக்கூடாது என்றும் கோயில் இடங்களில் இருக்கும் ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி இந்து முன்னணி சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது.

இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.