
அதிமுகவில் உழைப்பவர்களுக்கே மரியாதை பதவி தேடி வரும் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு மதுரையில் பேசினார்.
மதுரை திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய பகுதியில் துவரிமான் ஊராட்சியில் 15 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதியதாக கட்டிய கூடுதல் பள்ளி கட்டிடத்தை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜீ திறந்து வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…
முதலமைச்சரின் செயல்பாடுகளை அனைத்து மக்களும் பாராட்டி வருகின்றனர் பிரதமரே பாராட்டியுள்ளார்
எனவே முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்
வழிகாட்டுதல் குழுவில் அமைச்சர்கள் சிலருக்கு இடம் கொடுக்கவில்லை என்ற கேள்விக்கு அதிமுகவை பொறுத்தவரை அனைத்து சமுதாயத்தை சேர்ந்தவருக்கும் இடம் கொடுக்கும் வகையில் வழிபாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது இதில் எந்த ஒளி மறைவும் இல்லை கட்சியில் உழைப்பில் உயர்பவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படும் என்றார்
17 கோடியில் கொடிமங்கலம் பகுதியில் தடுப்பணைகள் கட்டப்பட்டு பணிகள் நடைபெறுகிறது இதன் மூலம் மதுரை மாவட்ட மக்களின் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து வரும் தண்ணீர் பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கப்படும் என்றார்
ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தில் சர்வர் பிரச்சனை உள்ளது இதனால் பொருட்கள் வழங்குவதில்
சிறிது தாமதம் ஆகும் ஆனால் வட மாநிலத்தவர்கள் பொருட்கள் வாங்க வந்து திரும்பி செல்ல கூடாது என
அவர்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது
50 லட்சம் மதிப்பிலான திட்டங்களை நிறைவேற்றி கடந்த 5 ஆண்டுகளாக பொதுமக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகின்றோம் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பேசினார்
- செய்தி: ரவிச்சந்திரன், மதுரை