December 9, 2024, 2:56 AM
26.4 C
Chennai

ஈவேரா., சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள்… நியாயமற்ற வகையில் நடந்து கொண்ட காவல்துறை!

police-black-dress
police black dress

ஈவேரா., சிலைக்கு மாலை அணிவித்த காவலர்கள் 3 பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை நியாயமற்ற வகையில் நடந்து கொண்டிருப்பதாகவும், அவர்கள் இதற்காக பணியிடை நீக்கம் செய்யப் பட்டிருக்க வேண்டும் என்றும் குரல்கள் எழுந்துள்ளன.

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறையின் காவலர்கள் மூன்று பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர். இதன் பின்னர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி ஆகியோர், இந்த மூன்று பேரின் பணியிட மாற்றத்துக்கான காரணத்தை அறிக்கை வாயிலாக வெளியிட்டனர். இதன் பின்னரே இந்தக் காவலர்கள் மூன்று பேரும் செய்த நேர்மையற்ற செயல்கள் வெளி உலகத்துக்கு தெரியவந்தன.

இம்மூவரின் பணியிட மாற்றப் பின்னணியில் அவர்கள் கடந்த மாதம் ஈ.வே.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்று இருவரும் தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டனர்.

viduthalai-mater

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ரங்கராஜ், அசோக், ரஞ்சித் உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி ஈ.வே.ராமசாமி நாயக்கர் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அந்த சிலையின் கீழ் நின்று படம் எடுத்துக் கொண்டனர். இந்த செல்பி படம் சமூக ஊடகங்களில் பெரிய அளவில் வைரலானது. எனினும், காவலர்கள் மூவரும் அந்தப் படத்தை எடுத்தபோது மூன்று பேருமே காவல் சீருடையில் இல்லாமல் கறுப்பு நிற சட்டை அணிந்தபடி எடுத்த படத்தை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தனர். அரசுப் பணியில் இருக்கும் காவல்துறையைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு ஒரு சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் வண்ணம் தங்களை அடையாளப் படுத்தி வெளியிட்ட விதத்தை நேர்மையாளர்கள் அனைவரும் கண்டித்தனர்.

இந்த நிலையில்தான், அவர்கள் மூவரும் கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டது. இதை அடுத்து அவர்கள் ஈ.வே.ரா., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னணியிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டனர் என்றும் அதனுடன் தகவல் பரவியது.

இந்நிலையில், திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்து, விடுதலை இதழில் எழுதவும் செய்தார். மேலும் நடப்பது அண்ணா ஆட்சியா, ஆச்சாரியார் ஆட்சியா? என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

ALSO READ:  சபரிமலை புதிய மேல்சாந்தி தேர்வு!

கி.வீரமணியைத் தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவ