தென்காசி காசிவிஸ்வநாதர் ஆலய கொடியேற்று விழா

சற்றுமுன்
பல நூறு ஆண்டுகள் பழமைவாந்த தென்காசி  காசிவிஸ்வநாதர்
ஆலயத்தில் திருக்கல்யாணத்திருவிழா கொடி ஏற்றத்துடன் தொடங்கியது தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களுள் ஒன்று நெல்லை மாவட்டம் தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதர் ஆலயம். இந்த கோவில் பல நூறு ஆண்டுகள் பழமையானது. இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் செயல்படும் இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் பல்வேறு திருவிழாக்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். 
இந்த ஆண்டிற்கான ஐப்பசி திருக்கல்யாண திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவானது மொத்தம் 11 நாட்கள் நடைபெறுகிறது. இன்று காலையில் அம்மன் சன்னதி முன்பு உள்ள கொடி மரத்திற்கு பால், தயிர், சந்தணம், மஞ்சள், திரவியம், இளநீர்போன்ற அபிஷேக பொருட்களால் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
பின்னா; புனித நீர் ஊற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தினமும் உற்சவ மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாரதனை மற்றும் வீதி உலா நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 11.11.2017 அன்றும், 13.11.2017 அன்று தபசு காட்சி கொடுத்தல் மற்றும் திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடை பெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாட்டினை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்
ALSO READ:  ஆக்கிரமிப்பாளர்களுக்கே கோயில் சொத்துகளை பட்டா போடுவதா? தவெக., அரசுக்கு வலுக்கும் கண்டனங்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.