எம்.ஜி்.ஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிய பத்திரி்கையாளர்கள் முடிவு

சற்றுமுன்
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி அருகே அமைந்துள்ள இஸ்ரோ மையத்தின் பின் பகுதியில் கடந்த மாதம் பாறை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டு சிதறியது. இதுகுறித்து செய்தி வெளியிட்ட  புதிய தலைமுறை நெல்லை மண்டல தலைமை செய்தியாளர் நாகராஜன், வள்ளியூர் புதிய தலைமுறை செய்தியாளர் ரஜூவ் கிருஷ்ணா மற்றும் தினகரன் வள்ளியூர் செய்தியாளர் ஜெகன்  ஆகியோர் மீது பணகுடி காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு உண்மைக்கு புறம்பாக இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பத்திரிக்கையாளர்கள் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக அந்த வழக்கின் விசாரணை அதிகாரி மாற்றப்ப்பட்டார். மேலும், இதில் காவல்துறையினர் பத்திரிக்கையாளர்களை கைது செய்யமாட்டார்கள் என்ற உத்ரவாதமும் தமிழக காவல்துறை தலைவர் திரு. டிகே ராஜேந்திரனால் அனைத்து பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் கொடுத்தார். டிஜிபியின் வாக்கினை முழுமையாக நம்பி பத்திரிக்கையாளர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டனர். இந்தநிலையில், அவருடையை உத்தரவை மீறி திருநெல்வேலி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திரு. அருண்சக்தி குமார் உத்தரவின்பேரில்  தினகரன் பத்திரிக்கையாளர் ஜெகன் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது மற்றொரு அடிதடி வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அந்த வழக்கில் அவருக்கு பிணை கிடைக்க முயற்சித்தபோது, இஸ்ரோ வழக்கிலும் கைது செய்யப்பட்டுள்ளார். இது ஒரு திட்டமிடப்பட்ட செயலாகவும், தமிழக காவல்துறை தலைவரின் உத்தரவையும் மீறி நடைபெற்ற கைதாக திருநெல்வேலி மாவட்ட பத்திரிக்கையாளர்கள் கருதுகின்றனர். இந்த சூழ்நிலையில், ஜனநாயக ரீதியில் போராடுவது என நெல்லை பத்திரிகையாளர் மன்றத்தில் இன்று கூடிய செயற்குழுவில் முடிவெடுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் வரும் 12ஆம் தேதி நெல்லை மாவட்டத்தில் அரசு சார்பில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கருப்பு பேட்ஜ் அணிந்து செய்தி சேகரிப்பது என முடிவெடுக்பட்டுள்ளது. இதனை தவிர தங்களது எதிர்ப்பினை பதிவு செய்வதற்கு வேறு வழியில்லை எனவும், இந்த விவகாரத்திற்கு தீர்வு காண தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிசாமி, அரசு உயரதிகாரிகள், பிற அரசியல் கட்சி தலைவர்கள்,  சமூக ஆர்வலர்கள் முன் வர வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர். அரசுக்கும், மக்களுக்கும் பாலமாக விளங்கும் பத்திரிகையாளர்கள்
 மீதான தாக்குதல் ஜனநாயகத்தை நசுக்கும் செயலாக பொதுமக்கள் பார்க்கின்றனர். 
இத்தகவலை செய்தியாளர்கள் வாட்ஸாப் மூ
லம்  பகிர்ந்துவருகின்றனர்
ALSO READ:  BRICS: ரஷ்ய அதிபர் புடினுக்கு மோடி அளித்த தமிழர் ‘நிர்வாகப் பொக்கிஷ’ பரிசு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.