மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை: சவரணுக்கு ரூ.80 உயர்வு!

சற்றுமுன் தமிழகம் வணிகம்
01 Oct16 gold rate
01 Oct16 gold rate

மீண்டும் உயர்ந்து வருகிறது தங்கத்தின் விலை. சவரனுக்கு ரூ.80 உயர்ந்துள்ளது.

கொரோனா காரணமாக ஏற்பட்ட பொருளாதார ஏற்ற இறக்கங்களால் தங்கத்தின் விலை மீண்டும் இப்போது உயர்ந்து வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பாதிப்பால் உலக அளவில் தொழில்துறை முடங்கியுள்ளது. மக்களின் வருவாய் பெருமளவு பாதிக்கப் பட்டிருக்கிறது. இதனால் அரசுகளும் கூட திண்டாடிக் கொண்டிருக்கின்றன.

தொழில்கள் தேக்கம் அடைந்ததால் தங்கத்தில் முதலீடு செய்பவர்கள் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்தது. இதனால் கடந்த மாதம் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ. 5ஆயிரத்தை வரலாற்றில் முதல் முறையாகக் கடந்தது. சவரண் விலை ரூ.40 ஆயிரத்தை தாண்டியது. பிறகு படிப்படியாக தங்கத்தின் விலை குறைந்து கிராம் ரூ.5 ஆயிரம் என்ர நிலையில் இருந்து வெகுவாகக் குறைந்தது.

இந்நிலையில் கடந்த சில வாரங்களாக ஏற்ற இறக்கத்துடன் விற்பனையான தங்கத்தின் விலை தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.37,520க்கு விற்பனை ஆகிறது. அதேபோல கிராமுக்கு ரூ.10 அதிகரித்து ரூ.4,690க்கு விற்பனை ஆகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.