நெல்லை: கோயில் சொத்துகள் ஆக்கிரமிப்பு; மெத்தன அறநிலையத் துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்!

Published:

nellai-protest
nellai-protest

திருநெல்வேலி, பாளையங்கோட்டை திம்மராஜபுரம் அருள்மிகு வேங்கடாசலபதி கோவிலுக்கு 200 ஏக்கர் நிலம் இருந்தும் அடுத்த மாதம் கோவிலுக்கு விளக்கேற்ற எண்ணெய் இல்லை… ஆனால் அதன் கோவில் நிலங்கள் அனைத்தும் ஆக்கிரமிப்பு.. இதற்கு அறநிலையத்துறை உடந்தையாக இருந்து மெத்தனப் போக்குடன் செயல்படுகிறது என்று கூறி இந்து அமைப்புகள், அறநிலையத் துறையைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

nellai-protest2
nellai-protest2

திம்மராஜபுரம் வேங்கடாசலபதி கோயில் ஆக்கிரமிப்பாளர் களுக்கு பட்டா வழங்கக் கோரி வைகோ , திமுக , கம்யூனிஸ்ட் உள்ளிட்டோர் முதலமைச்சருக்கு மனு அளித்துள்ளனர். இந்த நிலையில், ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றி ஆலய சொத்துக்களை பாதுகாக்க வழியில்லாமல் உறங்கிக் கொண்டிருக்கும் இந்து சமய‌ அறநிலையத் துறையைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 21.10.2020 புதன்கிழமை அன்று பாளை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகில் திருநெல்வேலி அறநிலையத்துறை இணை ஆணையாளர் அலுவலகம் முன் நடைபெற்றது.

nellai-protest3
nellai-protest3

இதில் ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து இயக்கங்களின் மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

ALSO READ:  திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் குழைகாதர், இந்து முன்ணனி மாநில துணை தலைவர் V.P.ஜெயகுமார், விசுவ ஹிந்து பரிஷத் மாநில இணைச் செயலாளர் காளியப்பன், இந்து முன்ணனி மாநில செயலாளர் குற்றாலநாதன், விசுவ ஹிந்து பரிஷத் மாநில நிர்வாகிகள் செல்லபாண்டியன், பன்னீர்செல்வம், ABVP மாநில இணை செயலாளர் ஸ்ரீவிக்னேஷ் , விசுவ ஹிந்து பரிஷத் தென்மண்டல அமைப்பாளர் சுப்பையா, இந்து முன்ணனி மாவட்ட செயலாளர் சுடலை, BMS மாவட்ட அமைப்பாளர் செந்தில், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட தலைவர் முத்துகுமார், விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர்கள் இ.ஆறுமுகக்கனி, ஐயப்பன் விசுவ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் பாலவிக்னேஷ், இசக்கி, குருசாமி, ஸ்ரீனிவாசன், ரமேஷ் , Apgp மணி மற்றும் இந்து அமைப்புகளின் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

Related articles

Recent articles

spot_img