மந்திராலயத்தில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனத்துக்கு நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
ஆந்திர மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ள மந்திராலயம் ஸ்ரீ ராகவேந்திரர் பிருந்தாவனக் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சென்று சுவாமி தரிசனம் செய்தார். 
பின்னர் அவர், அங்குள்ள துங்கபத்ரா நதியில் புனித நீராடினார். அதன்பின்னர் ரஜினிகாந்த் அங்குள்ள கிராம தேவதையான மஞ்சாலம்மா கோயிலுக்குச் சென்று அங்கேயும் தரிசனம் செய்து வழிபட்டார்.
பின்னர், ஸ்ரீ ராகவேந்திரர் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, அவர், மடாதிபதி சுபுதீந்திராவை சந்தித்து ஆசிபெற்றார். அப்போது அவர் சுமார் 15 நிமிடங்கள் வரை மடாதிபதியுடன் பேசினார். பின்னர் அவர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார். 
ரஜினிகாந்த் வந்ததை முதலில் அறியாத அங்கிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள், ரஜினியை பார்த்த பின்னர் அவருடன் சேர்ந்து செல்போன்களில் படம் எடுத்துக்கொண்டனர். 
விரைவில் ரஜினி நடித்த 2.0 படம் வெளிவர இருப்பதால் படம் வெற்றிகரமாக அமைய வேண்டி ரஜினிகாந்த் ஸ்ரீ ராகவேந்திரரை தரிசனம் செய்ததாக அவரது நெருங்கிய வட்டாரத்தினர் தெரிவித்தனர்.
ALSO READ:  திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending