
இந்து முன்னணி தலைமையிலான இந்துக்களின் மாபெரும் எழுச்சி போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது என்று மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் நெல்லையப்பர் கோயில் பக்தர்கள்
நெல்லையப்பர் திருக்கோவில் திருக்கல்யாண திருவிழாவை நடத்தக்கோரி நேற்றும் இன்றும் இந்து முன்னணி சார்பில் தொடர் போராட்டம் நடைபெற்றது. இன்று நடைபெற்ற போராட்டத்திற்கு இந்துமுன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமை தாங்கினார்
இந்துமுன்னணி மாவட்ட பொதுச்செயலாளர் பிரம்மநாயகம், மாவட்ட செயலாளர்கள் சுடலை , செல்வராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜசெல்வம் , நமசிவாயம், பக்தர் பேரவை மாவட்ட அமைப்பாளர் குணசீலன் பக்தர் பேரவை நெல்லையப்பர் திருக்கோவில் பொறுப்பாளர் ராஜகோபால், நெல்லை மண்டல முன்னாள் சேர்மன் வெங்கடாச்சலம் காரைக்கால் அம்மையார் திருமுறை வழிபாட்டு குழுவினர், பாஜக நெல்லை மண்டல தலைவர் ஆனந்தராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஆறுமுகக்கனி, பாஜக மகளிரணி மாவட்ட பொதுச்செயலாளர் மாரியம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பாஜக மாவட்டத் தலைவர் மகாராஜன், மதிமுக மாவட்டச் செயலாளர் நிஜாம் மற்றும் சமத்துவ மக்கள் கட்சி நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்

நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்டோர் திருக்கோவில் முன்பு திரண்டனர். திருக்கோவில் நிர்வாக அதிகாரி ராம்ராஜ் அறநிலையத்துறை உதவி ஆணையாளர் சங்கர் திருநெல்வேலி தாசில்தார் காவல் உதவி ஆணையாளர் சதீஷ்குமார் திருக்கோயில் பட்டர்கள் ஆகியோர் இந்து முன்னணி மாநில துணைத் தலைவர் V.P.ஜெயக்குமார் தலைமையிலான போராட்டக் குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இறுதியில் நாளை காலை திருக்கல்யாண திருவிழா கொடி ஏற்றி உள் பிராகாரங்களில் வீதிவலம் வந்து திருக்கல்யாணம் நடத்திட திருக்கோயில் நிர்வாகம் ஒப்புதல் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தொடர் போராட்டம் கைவிடப்பட்டது ..

முன்னதாக, இந்த விவகாரத்தில் இந்துக்களின் முயற்சிக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று, அனைத்துக் கட்சி மாவட்ட பொறுப்பாளர்களுக்கும் அன்பான வேண்டுகோள் இந்து முன்னணி சார்பில் விடுக்கப் பட்டது. அதில், நெல்லையப்பர் திருக்கோவில் ஐப்பசி திருக்கல்யாண விழா நடைபெற வேண்டி இந்து மக்களின் எழுச்சி போராட்டத்திற்கு அதிமுக திமுக மதிமுக கம்யூனிஸ்ட் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சி மாவட்டச் செயலாளர்களையும் நிர்வாகிகளையும் இந்து முன்னணி மனதார வரவேற்கிறது
கல்லறை தோட்ட பிரச்சனையில் கிறிஸ்தவர்களுக்காக கட்சி பேதமின்றி அனைத்து கட்சி மாவட்ட செயலாளர்களும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தது போல் அனைத்துக் கட்சி மாவட்டச் செயலாளர்களும் நெல்லையப்பர் திருக்கோவில் திருக்கல்யாணம் நடத்த இந்துக்களுக்கும் குரல் கொடுக்க வாரீர் அழைக்கிறது இந்து முன்னணி மற்றும் நெல்லையப்பர் திருக்கோவில் பக்தர்கள் என்று குறிப்பிட்டு நேற்று தகவல் பரப்பப் பட்டது குறிப்பிடத் தக்கது.