மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாரிசு எனவும், தனக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யக்கோரி பெங்களூருவை சேர்ந்த அம்ருதா என்ற பெண் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இம் மனு மீதான விசாரணை நடக்கிறது.
அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது…
1980ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி, மறைந்த ஜெயலலிதாவின் மகளாகப் பிறந்தேன். ஜெயலலிதாவின் அத்தையான ஜெயலட்சுமி என்பவர் பிரசவம் பார்த்தார்.
ஜெயலலிதாவுக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதால், இந்த உண்மை வெளிப்படுத்தப்படவில்லை
டி.என்.ஏ பரிசோதனைக்காக ஜெயலலிதா உடலையும் மெரினாவில் இருந்து தோண்டி எடுக்க வேண்டும். வைஷ்ணவ ஐயங்கார் பிராமண முறைப்படி ஜெ.வுக்கு இறுதிச்சடங்கு செய்யவேண்டும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.



