புதுக்கோட்டை: தேசிய பைலேரியாஸிஸ் தினம் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் அனுசரிக்கப்பட்டது.
விழாவிற்கு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பூவதி தலைமை தாங்கினார். சுற்றுப்புறத் தூய்மையும் அதனை பேணிக்காப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் விளக்கி கூறினார்.
மேலும் யானைக்கால் நோய்க்கு மருத்துவக் கல்லூரியில் வழங்கப்படும் சிகிச்சை குறித்து விளக்கிக் கூறினார்.
விழாவில் டாக்டர் அஜித் பிரபு குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இன்றைய சூழலில் பைலேரியாஸிஸ் நோய் குறித்து உலக அளவிலும், இந்திய அளவிலும், தமிழ்நாடு அளவிலும், மேற்கொள்ளப்பட்டுவரும் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் எடுத்துக் கூறினார்.
மேலும் யானைக்கால் நோய்க்கு மருத்துவ சிகிச்சை குறித்து டாக்டர் ரம்யா தேவி,யானைக்கால் நோய்க்கு செய்யும் அறுவை சிகிச்சையில் தற்பொழுது ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்து டாக்டர் வெங்கடசுப்ரமணியமும் எடுத்து கூறினார்கள்.
விழாவில் சுற்றுப்புற தூய்மை குறித்து ஒரு உறுதிமொழி எடுக்கப்பட்டது. முன்னதாக சுற்றுப்புற தூய்மைக்காக மரக்கன்றுகள் நடப்பட்டன.
- செய்தி: தனபால், புதுக்கோட்டை