டிசம்பர் 12ம் தேதி ரஜினி பிறந்த நாளை கொண்டாட தயாராகும் ரஜினி ரசிகர்கள் போஸ்டர் யுத்தத்தில் களம் இறங்கியுள்ளனர்.
பிறந்த நாள் வாழ்த்தையும் கூறிவிட்டு ரஜினியை தமிழக அரசியலுக்கும் அழைக்கும் விதமாக போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர் மதுரை ரசிகர்கள்.
தமிழகம் தலை நிமிர தலைமையேற்க வா தலைவா என்ற வாசகத்துடன் மதுரை நகர் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினர் போஸ்டர்களை ஒட்டி மீண்டும் மதுரையில் போஸ்டர் யுத்தத்தை துவக்கி உள்ளனர்.
மதுரை மாநகர் ரஜினி மக்கள் மன்ற துணை செயலாளர் அழகர்சாமி தலைமையிலான குழுவினர் இந்த போஸ்டர்களை மதுரை மாநகரின் முக்கிய பகுதிகளில் ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர்.