மதுரை; தீயணைப்பு வீரர்கள் மறைவுக்கு பாஜக., தலைவர் இரங்கல்!

சற்றுமுன் மதுரை
madurai-fire-dept
madurai-fire-dept

மதுரை: மதுரை துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்ட போது கட்டடம் இடிந்து விழுந்ததில், தீயணைப்பு வீரர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும் இருவர் பலத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்கள் இருவர் மரணத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக., தலைவர் எல். முருகன்

மதுரை விளக்குத்தூண் பகுதியிலுள்ள நவபத் கானா தெருவில், துணிக்கடை ஒன்று உள்ளது. இது ஒரு பழைய கட்டடத்தில் இயங்கி வந்தது. நேற்று இரவு இந்த கடையில் தீ பற்றியது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில், மதுரை சிட்டி மற்றும் அனுப்பானடி நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீபாவளிக்கு துணி பார்சல்கள் நிறைய வைக்கப்பட்டிருந்ததால், தீ மளமளவென வேகமாக பரவியது.

இந்நிலையில், திடீரென கட்டடம் இடிந்து விழுந்தது. இதில் சிக்கி தீயணைப்பு வீரர்கள் கிருஷ்ணமூர்த்தி(30), சிவராஜன்(36) இறந்தனர். மேலும் கல்யாண குமார்(30), சின்னகருப்பு(30) ஆகியோர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதனால் அப்பகுதி தீபாவளி மகிழ்ச்சியின்றி சோகமாக காணப்பட்டது

இதனிடையே, தீயணைப்பு வீரர்கள் இருவர் மரணத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார் தமிழக பாஜக., தலைவர் எல்.முருகன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.